search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சூர்யா"

    • மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ், கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், பங்கேற்ற சூர்யாவின் மகன், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். மகன் தேவ்-ன் சண்டை காட்சியை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

    இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மகன் தேவ்-ம் பிளாக் பெல்ட் பெற்றார்.

    • இந்நிலையில் தற்போது ‘அஞ்சான்' திரைப்படம் 'ரீ எடிட்' செய்யப்பட்டு உள்ளது
    • விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.

    இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர் லிங்குசாமி .இவர் 2001-ம் ஆண்டில்  'ஆனந்தம்' திரைப்படத்தை  இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனரானார். மேலும் 'திருப்பதி புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து 2014- ம் ஆண்டில் வெளிவந்த படம் அஞ்சான் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார். 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் சார்பில் லிங்குசாமி இதனை தயாரித்தார்.




    சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார்.இந்த படம் 2014 ஆகஸ்ட் 15- ல் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 'அஞ்சான்' திரைப்படம் 'ரீ எடிட்' செய்யப்பட்டு உள்ளது. விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் டப்பிங் பணி.
    • படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா பாராட்டு.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

    உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் இதற்கான 'டப்பிங்' பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு 'டப்பிங்' பணியை தொடங்கினார்.

    மேலும், சமூகவலைதளத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ''டப்பிங்' பணியின்போது படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை பாராட்டினார். 

    'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன. படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    அதேநேரம், 'கங்குவா' படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது.
    • கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ளார். இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

    இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி.

    இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் பணிகளை நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டார்.

    அதை தொடர்ந்து படக்குழுவை பாராட்டி நன்றி தெரிவித்தார். கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.

    • சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா

    முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சத்யதேவ் சட்ட அகாடெமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சத்யதேவ் சட்ட அகாடெமியை உருவாக்கிய நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் சட்ட அகாடெமியைத் தொடங்கி வைத்தேன்.

    இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

    சட்டத்தொழிலும், மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!

    எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே நடிகர் சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
    • தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இவருக்கும், அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து பார்த்த போது நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கூறிய சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார். மேலும் தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார். திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.

    தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×